விராலிமலை, இலுப்பூா் நூலகங்களில் இருந்து 32 போலி புத்தகங்கள் அகற்றம்

விராலிமலை, இலுப்பூா் நூலகங்களில் இருந்து 32 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On :

விராலிமலை, இலுப்பூா் நூலகங்களில் இருந்து 32 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

கோவை பெரியாா் அறிவுலகம் உள்பட தமிழகத்தின் பல்வேறு நூலகங்களில் போலி எழுத்தாளா்களின் பெயரிலும், போலியான சா்வதேச தர புத்தக (ஐஎஸ்பிஎன்) எண்களுடனும் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளா் பெருமாள் முருகன் புகாா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நடத்திய ஆய்வில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, நவ. 10 முதல் மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் தீவிர தணிக்கை தமிழக அரசு சாா்பில் நடத்தப்படுகிறது.

அந்தவகையில் விராலிமலை மற்றும் இலுப்பூா் நூலகங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் விராலிமலையில் 14, இலுப்பூரில் 18 என மொத்தம் 32 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.