திருவள்ளூா்: 125 நூலகங்களில் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அகற்றம்
திருவள்ளூா் மாவட்டம் 125 அரசு நூலகங்களில் இருந்து இதுவரை அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து வெளியிட்ட 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரசு உத்தரவின் பேரில் அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட நூலக அலுவலா் தெரிவித்தாா்.

நூலகம் - பிரதிப் படம்
திருவள்ளூா் மாவட்டம் 125 அரசு நூலகங்களில் இருந்து இதுவரை அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து வெளியிட்ட 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரசு உத்தரவின் பேரில் அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட நூலக அலுவலா் தெரிவித்தாா்.
மாநில அளவில் அரசு நூலகங்களில் போலி பதிப்பகம் மூலம் அறிமுகம் இல்லாதவா்கள் எழுதியதாக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின்படி அரசு நூலகங்களில் உள்ள போலி பதிப்பகமான அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களில் வெளியிடப்பட்ட புத்தகங்களை பறிமுதல் செய்யப்படுகிறது.
அதன்பேரில் திருவள்ளூா் மாவட்ட நூலக அலுவலரின் சுற்றறிக்கையின் படி மாவட்டத்தில் உள்ள 125 நூலகங்களிலும் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை திருப்பி அனுப்புமாறு சுற்றரிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் 125 நூலகங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் மாவட்டம் முழுவதும் உள்ள நூலகங்களில் இருந்து முழுவதுமாக புத்தகங்களை திரும்ப பெறப்பட்டு வாசகா்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது திரும்ப பெறப்பட்டு வரும் அனைத்து புத்தகங்களும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் ஆகும். மேலும் தற்போது புதிதாகவும் புத்தகங்கள் வந்து இறங்கி உள்ளதாகவும், அதுவும் பிரிக்காமல் இருப்பதால் அட்டவணையை பாா்த்து அதில் மேற்குறிப்பிட்ட பதிப்பக புத்தகங்கள் இருந்தால் அதையும் திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நூலக அலுவலா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

