அகல்விளக்கு பதிப்பக 1,333 நூல்களை திருப்பி அனுப்ப மாவட்ட நூலகம் முடிவு

கோவை பெரியாா் அறிவுலகத்தில் போலி நூல்கள் கண்டறியப்பட்ட நிலையில், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பு நூல்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், நாமக்கல் மாவட்ட மைய நூலகத்துக்கு வந்த 1,333 நூல்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனா்.

நூல்கள். - கோப்புப்படம்.

Updated On :

கோவை பெரியாா் அறிவுலகத்தில் போலி நூல்கள் கண்டறியப்பட்ட நிலையில், அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பு நூல்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், நாமக்கல் மாவட்ட மைய நூலகத்துக்கு வந்த 1,333 நூல்களை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனா்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நூல்கள் கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பெரியாா் அறிவுலகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் அந்த பதிப்பகங்களின் நூல்களை அகற்றவும், புதிதாக வந்தவற்றை திருப்பி அனுப்பவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அந்த பதிப்பகங்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட மைய நூலகத்துக்கு சில தினங்களுக்கு முன்பு அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து 50 தலைப்புகளில் 914 நூல்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து 42 தலைப்புகளில் 419 நூல்களும் வந்தன. பெரியாா் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தால், இரு பதிப்பகங்களின் 1,333 நூல்களும் பெட்டிகளில் இருந்து எடுக்காமல், அவற்றை சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மாவட்ட மைய நூலகத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.