சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கு வழங்கியுள்ளோம்: மு.க. ஸ்டாலின்

இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பது குறித்து...

mk stalin

நூலகங்கள், படிப்பகங்களுக்கு 10,000 நூல்களை வழங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்! - படம்: எக்ஸ்

Updated On :

இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 5) தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்!

அதனால்தான், திமுக ஆட்சியில், தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!

தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்!

திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்!

“பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று, பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள்,

வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள்,

செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள்

என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி!

நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்!

புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK leader M.K. Stalin donated 10,000 books to libraries and reading rooms today (Nov. 5).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.