கொடியேந்தி நிற்பவர்கள் அல்ல; கொள்கை ஏந்தி வாழ்பவர்கள்தான் திமுகவினர்: மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது...

தேசிய கல்விக் கொள்கை குறித்து மு.க. ஸ்டாலின் பேச்சு
கொடியேந்தி நிற்பவர்கள் அல்ல; கொள்கை ஏந்தி வாழ்பவர்கள்தான் திமுகவினர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் லட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உள்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
DMK members are not those who merely hold up flags; they are people who live by their principles, stated DMK leader M.K. Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

