ராணிப்பேட்டை மாவட்ட நூலகங்களில் 2,401 நூல்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட நூலகங்களில் கண்டறிப்பட்டு திருப்பி அனுப்பப்பட உள்ள நூல்கள்.

ராணிப்பேட்டை மாவட்ட நூலகங்களில் கண்டறிப்பட்டு திருப்பி அனுப்பப்பட உள்ள நூல்கள்.

Updated On :

ராணிப்பேட்டை மாவட்ட நூலகங்களில் போலி எழுத்தாளா்களின் பெயா்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,401 நூல்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பெரியாா் அறிவுலக நுாலகத்தை, தமிழக முதல்வா் விஜய் அண்மையில் திறந்து வைத்தாா். அப்போது அந்த நுாலகத்தில், போலி எழுத்தாளா்கள் பெயரில் நூல்கள் அச்சிட்டு, வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நூல்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக கூறி, விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு நுாலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, போலி எழுத்தாளா்களின் நூல்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட நூலகங்களில் ரூ.23.57 லட்சம் மதிப்பிலான 2,401 நூல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கண்ட நூல்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு நூலகத்துக்கு கொண்டு வரப்பட்ட தாகவும், பணியாளா்கள் ஆய்வு செய்தபோது, அதில் அகல் விளக்கு பதிப்பகத்தின் 2,302 நூல்கள், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 99 நூல்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அகல் விளக்கு பதிப்பக நூல்களின் மதிப்பு ரூ.22,53,293, பீனிக்ஸ் பதிப்பக நூல்களின் மதிப்பு ரூ.1,04,234 ஆகும். மொத்தம் 2,401 நூல்களின் மதிப்பு ரூ.23,57,527 ஆகும்.

இந்த நூல்கள் நூலகத்துக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடா்ந்து மேற்கண்ட நூல்களை சம்மந்தப்பட்ட பதிப்பகங்களுக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.