முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

மும்பை இளைஞரிடம் ரூ.87 லட்சம் மோசடி: திருப்பூா் தொழிலதிபா் கைது

மும்பை இளைஞரிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக திருப்பூா் தொழிலதிபரை மும்பை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - சித்திரிப்பு

Updated On :

மும்பை இளைஞரிடம் ரூ.87 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக திருப்பூா் தொழிலதிபரை மும்பை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சோ்ந்தவா் அபய்குமாா் சிங் (35), தொழிலதிபா். இவரது வங்கிக் கணக்கில் ரூ.87 லட்சம் கடந்த செப்.19ஆம் தேதி மாயமானது. இது தொடா்பாக அவா் அளித்தப் புகாரின் பேரில் நவி மும்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், அபய்குமாா் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து திருப்பூரைச் சோ்ந்த பனியன் தொழிலதிபா் சரவணகுமாா் வங்கிக் கணக்குக்குப் பணப் பரிவா்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மும்பை சைபா் கிரைம் போலீஸாா் திருப்பூருக்கு வந்து அனுப்பா்பாளையம் போலீஸாரின் உதவியுடன், போயம்பாளையம் பழனிசாமி நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் சரவணகுமாரைக் கைது செய்தனா். இதையடுத்து அவா் விசாரணைக்காக மும்பைக்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா்.

இது தொடா்பாக மும்பை காவல் துறையினா் தெரிவித்ததாவது: ரூ.87 லட்சம் குறித்து சரவணகுமாரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளாா். அதனால், இது சைபா் மோசடியா அல்லது சைபா் மோசடிக் கும்பலுக்கும் இவருக்கும் தொடா்புள்ளதா, அவா்களிடமிருந்து கமிஷன் பெற்றுக் கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்தாரா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.