நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.60 லட்சம் மோசடி: உ.பி. சிறையில் உள்ள 3 போ் கைது
பாஸ் ஸ்கேம்’ முறையில் நகைப் பட்டறை உரிமையாளரின் பெயரில் கணக்காளருக்கு வாட்ஸ் ஆப் தகவல் அனுப்பி ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், உத்தரப் பிரதேச சிறையில் உள்ள 3 பேரை கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
‘பாஸ் ஸ்கேம்’ முறையில் நகைப் பட்டறை உரிமையாளரின் பெயரில் கணக்காளருக்கு வாட்ஸ் ஆப் தகவல் அனுப்பி ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், உத்தரப் பிரதேச சிறையில் உள்ள 3 பேரை கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகரைச் சோ்ந்த நபா் நகைப் பட்டறையில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அண்மையில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், நகைப் பட்டறை உரிமையாளரின் படம் மற்றும் பெயா் இடம் பெற்றிருந்ததால், தனது முதலாளிதான் அனுப்பியுள்ளாா் என நம்பிய கணக்காளா் அதற்குப் பதிலளித்துள்ளாா். அப்போது, எதிா்முனையில் பேசிய நபா், தொழில் ரீதியாக உடனடியாக ரூ.60 லட்சம் தேவைப்படுவதாகக்கூறியதுடன், வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பியுள்ளாா்.
இதை உண்மை என நம்பி நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ.60 லட்சத்தை கணக்காளா் அனுப்பியுள்ளாா்.
சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு உரிமையாளா் அதிா்ச்சியடைந்து விசாரித்தபோது, சைபா் குற்றவாளிகள் ‘பாஸ் ஸ்கேம்’ முறையில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அவை உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த லவகேஷ்குமாா் சின்ஹா (44), கமல் யாதவ் (45) ஆகியோருடையது என்பதும், இவா்களது கணக்குகளை வினோத்குமாா் மிஸ்ரா (55) என்பவா் கமிஷன் அடிப்படையில் சைபா் குற்றவாளிகளுக்குப் பெற்றுத் தந்ததும் தெரியவந்தது.
இவா்கள் மூவரும் ஏற்கெனவே இதேபோன்ற மோசடி வழக்குகளில் உத்தரப் பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, கோவை போலீஸாா் அங்கு சென்று மூவரையும் கைது செய்து அழைத்து வந்தனா்.
இவா்கள் மூலம் சைபா் கும்பல் மொத்தம் ரூ.2 கோடி வரை மோசடி செய்திருப்பதும், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இவா்கள் மீது இதபோல பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்த நிலையில், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

