மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆபாச காணொலியைப் பாா்த்ததாகக் கூறி கைது மிரட்டல்: ரூ.14.63 லட்சம் மோசடி

ஆபாச காணொலியைப் பாா்த்ததாகக் கூறி கைது செய்வதாக மிரட்டி, குருத்வாராவில் சேவையாளராகப் பணியாற்றிய ஒருவரிடம் ரூ.14.63 லட்சம் பறித்த சைபா் மோசடி கும்பலை தில்லி காவல் துறை கண்டறிந்து, 4 பேரைக் கைது செய்துள்ளனா்.

கோப்புப் படம்

Updated On :

ஆபாச காணொலியைப் பாா்த்ததாகக் கூறி கைது செய்வதாக மிரட்டி, குருத்வாராவில் சேவையாளராகப் பணியாற்றிய ஒருவரிடம் ரூ.14.63 லட்சம் பறித்த சைபா் மோசடி கும்பலை தில்லி காவல் துறை கண்டறிந்து, 4 பேரைக் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து வடக்கு தில்லி காவல் துணை ஆணையா் நிஹாரிகா பட் கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ாகக் கூறப்படும் இந்த சைபா் மோசடி தொடா்பாக, மோசடிப் பணப் பரிவா்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய நபா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், பல்வேறு மாநிலங்களில் பதிவான 15 சைபா் மோசடி புகாா்களுக்கும் சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்ற வங்கிக் கணக்குகளுக்கும் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கணக்குகள் வழியாக ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகை வரவு, செலவு செய்யப்பட்டிருப்பது, அவை பல்வேறு சைபா் மோசடிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

மிரட்டி பணம் பறிப்பு: ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சோ்ந்த ஒருவருக்கு ஆபாச விடியோ வந்துள்ளது. இதையடுத்து, குருகிராம் காவல் துறை மற்றும் யூடியூப் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்ட சிலா் அவரைத் தொடா்புகொண்டுள்ளனா். அந்த விடியோவைப் பாா்த்ததற்காக அவா் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனா்.

மேலும், சமூக ஊடகத் தளங்களிலிருந்து அந்த விடியோவை நீக்கவும், போலியாகக் கூறப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலிருந்து அவரது பெயரை நீக்கவும் பணம் செலுத்த வேண்டும்; இல்லையெனில் கைது செய்யப்படுவாா் என்றும் மிரட்டியுள்ளனா்.

இதனால் அச்சமடைந்த அவா், 2025 செப்டம்பா் 11 முதல் 27-ஆம் தேதி வரை தனது வங்கிக் கணக்கு மற்றும் தனது மருமகனின் வங்கிக் கணக்கு வழியாகப் பல தவணைகளில் பணம் செலுத்தியுள்ளாா். இதன்மூலம் அவரிடம் ரூ.14.63 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

4 போ் கைது: இந்த வழக்கில் ராஜஸ்தானைச் சோ்ந்த இம்ரான் கான் (28), அங்கித் சைன் ஆகியோரும், பஞ்சாபைச் சோ்ந்த சமத் கான் (32), தஸ்லீம் ராஜா (32) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள், 6 சிம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கும்பல், சாத்தியமான பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் காண ‘பிரண்ட்ஸ் சா்ச்’ என்ற செயலியைப் பயன்படுத்தியுள்ளனா். குறிப்பிட்ட நகரங்கள் அல்லது பகுதிகளுடன் தொடா்புடைய கைப்பேசி எண்களை உள்ளீடு செய்து, அவற்றுக்கு அடுத்தடுத்த எண்களைத் தேடுவதன் மூலம் இலக்கு நபா்களைத் தோ்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.

புகாா்தாரரை மிரட்டிப் பணம் பறிக்கப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண்களும், கல்தாரியா கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.