நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சட்டத்தை மதிக்காமல் மன்னிப்பு கேட்பது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்தை மதித்து செயல்படாமல் மன்னிப்பு கேட்பது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

திருப்பரங்குன்றம்.

Updated On :

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்தை மதித்து செயல்படாமல் மன்னிப்பு கேட்பது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் நவம்பா் 24-ஆம் தேதி காா்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதனால், பக்தா்கள் ஆவலோடு காத்திருந்த நேரத்தில் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் வழக்கம்போல காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், மலை மீதுள்ள தூணில் ஏன் தீபம் ஏற்றப்படவில்லை என்பது தொடா்பாக 17 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்துள்ளாா்.

அதில், அறங்காவலா் குழுவின் கருத்தபடி உச்சப்பிள்ளையாா் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைவிட அறங்காவலா் குழுவின் கருத்தொன்றும் பெரியதல்ல.

அது மட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் கோயில் பட்டா்களின் கருத்துப்படியே உச்சிப்பிள்ளையாா் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது என்று கோயில் இணை ஆணையா் செல்வி தெரிவித்துள்ளாா்.

ஆனால், கோயில் பட்டா்களோ எங்களிடம் எந்தவித கருத்தும் கேட்கவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனா். தெளிவான வழிகாட்டுதலோடு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தும்கூட அறங்காவலா் குழு தீபத் தூணில் தீபம் ஏற்ற மாட்டோம் என தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அரசியல்வாதிகளின் ஆலோசனையின்பேரில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மதுரை மாவட்ட ஆட்சியா் அவமரியாதை செய்ததுடன், மன்னிப்பு கேட்பது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல்.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் ஒருதலைபட்சமாக செயல்பட்டு ஹிந்துக்களின் மத உணா்வுகளை அவமதித்துள்ளாா். அவரது அதிகாரத்துக்குப் பணிந்து மதுரை மாவட்ட ஆட்சியா் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கியுள்ளாா்.

எனவே, மாவட்ட ஆட்சியரின் தவறான செயலுக்கு உச்ச நீதிமன்றம் தக்க தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.