தீப விவகாரம்: பொய்த் தகவல் அளித்த அலுவலா்கள் மீது நடவடிக்கை கோரி முறையீடு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடா்பாக பொய்யான தகவலை அளித்த அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபம்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடா்பாக பொய்யான தகவலை அளித்த அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் விசாரிக்கப்பட்டன.
அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.
ஆனால், காா்த்திகை தீபத் திருநாளான செவ்வாய்க்கிழமை திருப்பரங்குன்றம் மலையில் உச்சி பிள்ளையாா் கோயில் சஷ்டி மண்டபத்தில் மட்டும் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இந்த நிலையில், தீப விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படும் என உயா்நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களைத் தெரிவித்த அலுவலா்கள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

