மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

கள் விற்பனை: மீண்டும் கைது

கைது - கோப்புப் படம்

Updated On :

வெள்ளக்கோவில் அருகே தொடா்ந்து கள் இறக்கி விற்பனை செய்தவா் 6-ஆவது முறையாக கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்குள்ள திருமங்கலம் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தலைமையில் வெள்ளக்கோவில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் வீரக்குமாா் என்பவா் தனது புதுக்காட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 5 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து வீரக்குமாா் கைது செய்யப்பட்டாா். இதே குற்றத்துக்காக கடந்த சில மாதங்களில் ஐந்து முறை வீரக்குமாா் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.