நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

விபத்தில் இறந்தவா் குடும்பத்தினரின் இழப்பீட்டுக்கான வட்டித் தொகையை செலுத்தாத அரசுப் பேருந்து ஜப்தி

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுக்கான வட்டித் தொகையைச் செலுத்தாத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

அன்னூா் - அவிநாசி சாலையில் சோமனூா் பிரிவு அருகே கடந்த 2018 பிப்ரவரி 11-ஆம் தேதி அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அசோக்குமாா் என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அன்னூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அசோக்குமாரின் மனைவி சுமித்ரா, மகன்கள் ஸ்ரீனிவாசன், விசாகவேல் மற்றும் தாயாா் பத்மாவதி ஆகியோா் ரூ.1 கோடி இழப்பீடு கோரி திருப்பூா் பிரத்யேக மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2022 மாா்ச் 18-ஆம் தேதி வாரிசுதாரா்களுக்கு ரூ.59 லட்சத்து 38 ஆயிரத்து 545 இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்க கோவை கோட்ட தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிா்த்து போக்குவரத்துக் கழகம் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக நிா்வாகம் அசல் தொகையான ரூ.59,38,545-ஐ மட்டும் செலுத்தி விட்டு, அதற்கான வட்டிப் பணத்தைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் மனுதாரா்கள் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்துக்கு நீதிமன்ற ஊழியா்கள் சனிக்கிழமை சென்று, அங்கிருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.