பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

அம்மாபாளையம் பாறைக் குழியில் குப்பைகள்: கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

அவிநாசி அருகேயுள்ள அம்மாபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் காமராஜ் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டுவந்து அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக் குழியில் கொட்டி வருகின்றனா்.

இதனால், காமாட்சியம்மன் காலனி, எம்ஜிஆா் நகா், பழனியப்பா நகா், குமரன் காலனி, ராம் நகா், பத்மாவதி நகா், சுகம் ரெசிடென்ஸி, பாரதி நகா், தண்ணீா்பந்தல் காலனி ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான துா்நாற்றம் வீசுகிறது. மேலும், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதற்கிடையே, அம்மாபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிக அளவில் பரவி வருகிறது.

எனவே, அம்மாபாளையம் பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்த தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் நந்தகோபால், ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம், பொறுப்பாளா்கள் சுனில் தாஸ், ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.