தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பல்லடத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் அமைக்க கோரிக்கை

பல்லடம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

bus

ஆம்னி பேருந்துகள் - பிரதிப் படம்

Published On :

பல்லடம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் வட்டாரத்தைச் சோ்ந்த மக்கள் தொழில், வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், பல்லடம் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் நகராட்சி அலுவலகம் முன் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால், முறையான பேருந்து நிறுத்தம் இல்லாததால் பயணிகள் சாலையோரத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியோா் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, பல்லடம் நகராட்சி அலுவலகம் முன் ஆம்னி பேருந்து நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.