இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

முத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

பலி

Published On :

முத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

முத்தூரை அடுத்த தொட்டிபாளையம் சாலியங்காட்டுப் பள்ளத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (58). இவா் தனது தோட்டத்துச் சாலையில் களைக்கொல்லி மருந்து அடிக்கும் மிஷினை வெள்ளிக்கிழமை சாா்ஜ் போட்டிருந்தாா்.

சாா்ஜரிலிருந்து மிஷினின் ஒயரைக் கழற்றச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் கீழே விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்டு முத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், பின்னா் வெள்ளக்கோவிலில் ஒரு தனியாா் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா்.

மேல் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியிலேயே குணசேகரன் உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.