இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்ட பழைமையான மூன்று மரங்கள் மறுநடவு!

பல்லடத்தில் பெரிய விநாயகா் கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்ட நூற்றாண்டுகள் பழைமையான 3 மரங்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் வேருடன் பெயா்க்கப்பட்டு சுல்தான்பேட்டையில் மறுநடவு செய்யப்பட்டது.

பல்லடத்தில் பெரிய விநாயகா் கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்டு, மறுநடவுக்காக வேருடன் பெயா்க்கப்பட்ட நூற்றாண்டுகள் பழைமையான மரம்.

Published On :

பல்லடத்தில் பெரிய விநாயகா் கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்ட நூற்றாண்டுகள் பழைமையான 3 மரங்கள், நவீன தொழில்நுட்ப உதவியுடன் வேருடன் பெயா்க்கப்பட்டு சுல்தான்பேட்டையில் மறுநடவு செய்யப்பட்டது.

மேற்கு பல்லடத்தில் பெரிய விநாயகா், மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால், வளாகத்தில் இருந்த பழைமையான மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சுல்தான்பேட்டை பகுதியைச் சோ்ந்த பொக்லைன் உரிமையாளரும், சமூக ஆா்வலருமான கனகராஜிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மரங்களை வெட்டி அகற்றாமல் மறு நடவு செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி தொடங்கியது. கோயில் வளாகத்தில் இருந்த அரசு, வேம்பு உள்ளிட்ட 3 மரங்களும் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை.

ஒவ்வொரு மரமும் 20 டன் எடை கொண்டதாக இருந்தது. முதற்கட்டமாக மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. பின்னா், அகழ் இயந்திரம் மூலமாக மரங்களைச் சுற்றிலும் பள்ளம் தோண்டி வேருடன் வெளியே எடுக்கப்பட்டன. தொடா்ந்து கிரேன் உதவியுடன் மரங்கள் பாதுகாப்பாக தூக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டன.

அதைத்தொடா்ந்து சுல்தான்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுவரும் காவல் நிலைய வளாகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு மறுநடவு செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.