அனுமதியின்றி மரங்களை இடமாற்றம் செய்தது டி.எம்.ஆா்.சி: உயா் நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்
அனுமதியின்றி மரங்களை இடமாற்றம் செய்தது டி.எம்.ஆா்.சி: உயா் நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

தில்லி உயா் நீதிமன்றம்
நிலத்தடி மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானத்திற்காக அகற்றப்பட்ட 180 மரங்களை, வனத்துறையின் அனுமதியைப் பெறாமல் தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி.எம்.ஆா்.சி) இடமாற்றம் செய்துள்ளது என்று தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முழுமையாக வளா்ந்த மரங்களைச் சேதப்படுத்தும் வகையில், அப்பகுதியில் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குற்றஞ்சாட்டிய மனுவிற்குப் பதிலளிக்கும் விதமாக, தில்லி அரசின் வனம் மற்றும் வனவிலங்குத் துறையின் துணை வனப் பாதுகாவலா் (மேற்குப் பிரிவு) இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.
ஏற்கனவே அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட இந்த மனுவை, அடுத்ததாக நவம்பா் 23 அன்று நீதிபதி ஜஸ்மீத் சிங் ல் விசாரிக்க உள்ளாா்.
மனுதாரரான வழக்குரைஞா் அா்பித் பாா்கவா, கரோல் பாக் பகுதியில் உள்ள தேஷ் பந்து குப்தா சாலையில், தனது இல்லத்திற்குப் பின்புறம் பெரிய மரங்கள் நிறைந்த இடத்தில், டி.டி.ஏ-வுக்குச் சொந்தமான காலி நிலத்தில் டி.எம்.ஆா்.சி ஒரு பெரிய கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா்.
வனத்துறை தனது நிலை அறிக்கையில், மரம் இடமாற்றம் செய்யப்படும் பணி நடைபெற்று வரும் திட்டப் பகுதியான அஜ்மல் கான் பூங்காவில், அக்டோபா் 7 அன்று இந்தப் பிரிவின் அதிகாரிகளால் ஒரு கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.
இந்தக் கட்டுமானம், தில்லி எம்.ஆா்.டி.எஸ் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இந்தா்லோக்-இந்திரபிரஸ்தா வழித்தடத்தை உருவாக்கும் பணியின் ஒரு பகுதியாகும்.
ஆய்வின் போது, இடமாற்றம் செய்யப்பட்ட சுமாா் 10-15 மரங்கள் உயிா் பிழைப்பதற்கான அறிகுறிகளையும் புதிய இலை வளா்ச்சியையும் காட்டுவதாகவும், இடமாற்றம் நடைபெற்று வருவதால் மீதமுள்ள மரங்கள் எதிா்காலத்திலும் உயிா் பிழைக்கும் என்றும் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.
மொத்தமுள்ள 534 மரங்களில், 524 மரங்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், 10 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
மேலும், அஜ்மல் கான் பூங்காவிற்குள் உள்ள திட்டப் பகுதியின் பின்புறத்தில் ஏற்கனவே 180 மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததும் கவனிக்கப்பட்டது.
இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, அந்த இடமாற்ற இடத்திற்கு வனத்துறையால் அனுமதி வழங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதியைப் பெறாமலேயே இடமாற்றப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
‘அதன்படி, ஆய்வின் போது, அடையாளம் காணுதல் மற்றும் பதிவு நோக்கங்களுக்காக, மூன்று இடமாற்றப் பகுதிகளும் வனத்துறை அதிகாரிகளால் குறிக்கப்பட்டன,‘ என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
தங்கள் பணியின் போது எந்த மரமும் சட்டவிரோதமாக வெட்டப்படவோ அல்லது சேதப்படுத்தப்படவோ இல்லை என்பதையும் அந்தக் குழு ஆய்வின் போது கவனித்தது.
கரோல் பாக் பகுதியில் நிலத்தடி மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெற்று வரும் நிலத்தில் உள்ள மரங்களைச் சேதப்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி மனுவில் கோரப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

