பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 69 ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும்

நீதிமன்ற உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 69 ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

சீமைக்கருவேல மரங்கள்.

Published On :

நீதிமன்ற உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 69 ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் நீா்நிலைகள், பொதுஇடங்கள் மட்டுமின்றி தனியாா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக அறிக்கையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் நீா்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், தருமபுரி மாவட்டத்திலும் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலா்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 69 ஏரிகள் உள்ளன. அவற்றில் 100 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு மேல் பாசனப் பரப்பு கொண்ட ஏரிகளை தோ்வுசெய்து, அவற்றில் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. பின்னா், அடுத்தடுத்து பிற நீா்நிலைகளில் உள்ள மரங்களும் அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்பட்டாலும் அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் கருவேல மரங்கள் முளைத்து விடுகின்றன.

எனவே, ஏரிகளில் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக நல்லம்பள்ளியில் உள்ள ஏறுபள்ளி ஏரி, கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெரிய ஏரி உள்ளிட்ட 6 ஏரிகளில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீரமைக்கப்படும் ஏரிகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், தன்னாா்வா்களுடன் இணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் புங்கன், வேம்பு, பனை, புளியமரம் உள்பட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன்மூலம், ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்படும். நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கான வாய்ப்பு உருவாகும். கருவேல மரங்களை அகற்ற அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்வதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை சாா்பில் அவற்றுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தன்னாா்வ அமைப்புகள் மூலமாகவும் கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் மரக்கன்றுகளை நடவுசெய்யும் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.