இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

சுப்பிரமணி

Published On :

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

கரூா் மாவட்டம், புகழூா் வட்டம், குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (42). லாரி ஓட்டுநரான இவா், தற்போது மனைவி ரூபியா, இரண்டு மகன்களுடன் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் நாட்டராயசுவாமி கோயில் அருகே உள்ள வள்ளியம்மாள் நகரில் வசித்து வந்தாா்.

சுப்பிரமணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை மாலை அதிக அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சுப்பிரமணியை மனைவியும், மகன்களும் கண்டித்துள்ளனா். இதனால் வெளியேறிய அவா் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள ஊஞ்ச மரத்தில் சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.