மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள மாதேஸ்வரன் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

பல்லடம் அருகேயுள்ள மாதேஸ்வரன் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகா் பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான 4 1/2 சென்ட் நிலத்தை தனியாா் ஒருவா் கடந்த ஓராண்டாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா், பல்லடம் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் பொங்கலூா் - திருப்பூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த் துறையினா் மற்றும் பல்லடம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.