கிடப்பில் சாலை விரிவாக்கப் பணி பொதுமக்கள் சாலை மறியல்

கரூா் அருகே சாலை விரிவாக்கப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து கரூரில் வியாழக்கிழமை பொதுமக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :

கரூா் அருகே சாலை விரிவாக்கப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து கரூரில் வியாழக்கிழமை பொதுமக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சிக்குள்பட்ட சின்னாண்டாங்கோவில் சாலையில் பெரியாா் வளைவு முதல் அங்காளம்மன் கோயில் வரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டதையடுத்து, சாலையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பணிகள் சாலை விரிவாக்கம் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ.7 கோடியில் தொடங்கின.

சுமாா் 70 சதவீத பணிகள் முடிந்த நிலையில் பணிகள் திடீரென கிடப்பில் போடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும் மழைக் காலங்களில் மழைநீா் சாலைகளில் ஓடி ஆங்காங்ககே குழிகள் தோன்றின.

எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப்பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதியினா் பல முறை நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வியாழக்கிழமை காலை சமநீதி கழகத்தலைவா் அண்ணாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆண்டாங்கோவில் சாலையில் சங்கரா காா்டனுக்குச் செல்லும் பிரிவு பகுதியில் அமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளா் சந்திரன், கரூா் வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியையடுத்து கலைந்து சென்றனா்.

மறியலால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.