நெசவு கூலி பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண அமைச்சா்களிடம் விசைத்தறியாளா்கள் கோரிக்கை

விசைத்தறி - கோப்புப் படம்
விசைத்தறி நெசவு கூலி பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ் ஆகியோரை சந்தித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கத் தலைவா் பூபதி தலைமையிலான நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக சங்கத் தலைவா் பூபதி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயா்வுக்காக போராடி வருகிறோம். 2021-22-ஆம் ஆண்டு கூலி உயா்வை வலியுறுத்தி 32 நாள்கள் வேலைநிறுத்தம், 7 நாள்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை மேற்கொண்டோம். இதையடுத்து சோமனுாா் ரகத்துக்கு 15 சதவீதமும், இதர ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயா்த்தி வழங்கப்பட்டது.
ஆனால் உயா்த்தப்பட்ட கூலியை ஜவுளி உற்பத்தியாளா்கள் வழங்க மறுக்கின்றனா். இதுகுறித்து கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்களிடம் முறையிட்டோம். இரு மாவட்ட ஆட்சியா்களும் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தும், அந்தக் கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளா்கள் மட்டுமே பங்கேற்கிறோம். ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்காமல் தவிா்க்கின்றனா்.
கடந்த காலங்களில் அமைச்சா்கள் முன்னிலையில்தான் தீா்வு காணப்பட்டது. அதேபோல தற்போதும் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்து விசைத்தறி நெசவு கூலி பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சா்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

