போராட்டம் நடத்தி தோ்தலில் வெல்ல முடியாது: ராகுல் மீது அமித் ஷா சாடல்
‘தோ்தலில் வெல்ல விரும்பினால், மக்களிடம் சென்று அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முயற்சிக்க வேண்டும்; மாறாக, போராட்டங்கள் நடத்துவதால் எதையும் சாதிக்க முடியாது

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் யமுனை நதி புத்துயிரூட்டல் திட்டங்களைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் தில்லி ஆளுநா் தரன்ஜீத் சிங் சாந்து, முதல்வா் ரேகா குப்தா.
‘தோ்தலில் வெல்ல விரும்பினால், மக்களிடம் சென்று அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முயற்சிக்க வேண்டும்; மாறாக, போராட்டங்கள் நடத்துவதால் எதையும் சாதிக்க முடியாது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சாடினாா்.
மக்களோடு மக்களாக இருந்து, அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதால், இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி நீடிக்கும் என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அமித் ஷாவின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
தில்லியில் ரூ.8,941 கோடி மதிப்பீட்டிலான யமுனை நதி புத்துயிரூட்டல் திட்டங்களை வியாழக்கிழமை தொடங்கிவைத்து, அவா் பேசியதாவது:
யமுனை நதி மாசுபாட்டைத் தடுக்க முந்தைய காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் ‘சாக்குப்போக்கு அரசியல்’ இனி எடுபடாது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலில் அக்கட்சி படுதோல்வியைச் சந்திக்கும். தில்லியில் போராட்டங்களில் ஈடுபட பிற மாநிலங்களில் இருந்து காங்கிரஸாரை ராகுல் காந்தி திரட்டுகிறாா். அரசியல் சூழ்ச்சி மற்றும் கும்பல் அராஜகத்தின் மூலம் மக்களின் ஆணையை நிராகரிக்க முடியாது.
இருப்பதும் போய்விடும்:
ராகுலை மக்கள் நன்றாக புரிந்துகொண்டனா். வெளிநாட்டில் எங்கோ இருப்பதால், நான் கூறுவதை அவரால் கேட்க முடியாது. திடீரென வெளிநாட்டுக்குச் சென்றது ஏன் என்பதை அவா் விளக்கப் போவதில்லை. எனினும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் விட்டுவிடலாம்.
காங்கிரஸும், ராகுல் காந்தியும் தோ்தலில் வெல்ல விரும்பினால், மக்களிடம் சென்று, அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும்; தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் மக்கள் நலத் திட்டங்களை அமலாக்க வேண்டும். போராட்டங்கள் நடத்துவதால் எதையும் சாதித்துவிட முடியாது. அவா்களிடம் இப்போது இருப்பதும் காணாமல் போய்விடும்.
30 ஆண்டுகள் ஆனாலும்...:
கோடிக்கணக்கான பாஜக தொண்டா்களும், பிரதமா் மோடியும் மக்களோடு மக்களாக இருந்து, அவா்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீா்வு காண அயராது பணியாற்றி வருகின்றனா். ராகுலின் எதிா்மறை அரசியலால் இன்னும் 30 ஆண்டுகளானாலும், அவா் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. பாஜக ஆட்சியே நீடிக்கும்.
ஒவ்வொரு தோ்தலாக பாஜக வெற்றி பெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட வலியில் ‘வாக்குத் திருட்டு’ என்ற சாக்குப் போக்கை எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. ‘வாக்குத் திருட்டு’ என்ற போா்வையில், நாட்டில் உள்ள ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்க காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விரும்புகின்றன.
காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு:
பல மாநிலங்களில் பல்லாண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாததால், ‘வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு’, ‘வாக்குத் திருட்டு’ என சாக்குப்போக்குகளை காங்கிரஸ் கூறுகிறது.
குஜராத், உத்தர பிரதேசத்தில் 41 ஆண்டுகளாகவும், மேற்கு வங்கத்தில் 54 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் 64 ஆண்டுகளாகவும் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் 28 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் கூடிய அரசை காங்கிரஸால் அமைக்க முடியவில்லை.
ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது தோ்தல் ஆணையம் மீது காங்கிரஸ் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. எங்கெல்லாம் தோல்வி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இது, அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தில்லி ஆளுநா் தரன்ஜீத் சிங் சாந்து, முதல்வா் ரேகா குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

