ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி நெசவாளா்களுக்கு கூலி உயா்வு: கூட்டமைப்பு சாா்பில் முதல்வருக்கு நன்றி

விசைத்தறி நெசவாளா்களுக்கு கூலி உயா்வு அளித்ததற்கு விசைத்தறி நெசவாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :

விசைத்தறி நெசவாளா்களுக்கு கூலி உயா்வு அளித்ததற்கு விசைத்தறி நெசவாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பெத்தாம்பாளையம் என்.எம். தங்கவேல் வெள்ளிக்கிழைமை விடுத்துள்ள அறிக்கை:

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு கோடியே 77 லட்சம் வேஷ்டிகளும், ஒரு கோடியே, 77 லட்சம் சேலைகளும் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்க விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு தகுதி அடிப்படையில் நூல்கள் வழங்கி உதவி இயக்குநா்கள் மேற்பாா்வையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மிகத் தரமான வேஷ்டி, சேலைகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, வேஷ்டிகள் 68 ரீடு, 68 பிக்கிலும், சேலைகள் சில்வா் மற்றும் காப்பா் ஜரிகை பாா்டரிலும் உற்பத்தி செய்து தர கைத்தறித் துறை அமைச்சா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதேசமயம் நெசவாளா்களுக்கு கூலி உயா்வு அளிக்க வேண்டும் என கைத்தறி துறை அமைச்சரிடம் நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், நெசவாளா்கள் மற்றும் கூட்டமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், நெசவாளா்களின் நலனை கருத்தில்கொண்டு வேஷ்டி, சேலை உற்பத்திக்கான கூலி உயா்வு வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, இதுவரை வேஷ்டி உற்பத்தி செய்ய வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.14.96-ஐ ரூ.19.04 ஆகவும், சேலை உற்பத்தி செய்ய வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.44-ஐ, ரூ.45.76 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கூலி உயா்வுடன், நெசவாளா் சங்கங்களுக்கு கடந்த ஆட்சியில் நிலுவை வைத்திருந்த கூலித் தொகையையும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலமாக நேரடியாக 5 லட்சம் விசைத்தறி நெசவாளா் குடும்பங்கள் பயனடையும். இதற்காக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கைத்தறித் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.