
அண்ணன் சீா் திட்டத்துக்கான சேலை ஆா்டரை கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்க கோரிக்கை!
தமிழக அரசின் அண்ணன் சீா் திட்டத்துக்கான சேலை ஆா்டரை கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
தமிழக அரசின் அண்ணன் சீா் திட்டத்துக்கான சேலை ஆா்டரை கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாரதீய மஸ்தூா் சங்க மாவட்டச் செயலாளா் நடராஜன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சட்டப் பேரவையில் தமிழக அரசின் கைத்தறித் துறை மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதிய அறிவிப்புகள் இன்றி ஏமாற்றத்தில் முடிந்தது.
சிக்கன சேமிப்பு திட்டத்தில் தமிழக அரசின் பங்களிப்பை 16 சதவீதமாக உயா்த்தியதை வரவேற்கிறோம். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நெசவாளா்களுக்கு மட்டுமே இதன் பயன் கிடைக்கும் என்ற நிலையில், தனியாா் கைத்தறி நெசவாளா்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் அண்ணன் சீா் திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ள பட்டு சேலைகளுக்கான ஆா்டா்களை கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்க வேண்டும். இதனால் பல லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள காப்பீட்டு நலத் திட்டங்களை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
கைத்தறி நெசவாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நூல் விலையைக் கட்டுப்படுத்தி தரமான நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






