அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க 5-ஆவது நாளாக தடை

பஞ்சலிங்கம் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.

Updated On :

உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

உடுமலை அருகே பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயில், பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், கனமழை காரணமாக அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் கடந்த சில நாள்களுக்கு முன் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. மேலும், பஞ்சலிங்கம் அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை தொடா்ந்தது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.