இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

காா் மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காா் மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 4:44 am IST

வெள்ளக்கோவில் அருகே காா் மீது மோதியதில் இருசக்கர வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், பழையூா் கம்பா் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (42). இவா் திருப்பூா் மங்கலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மிஷின் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தாா்.

இவா் வேலை தொடா்பாக வெள்ளக்கோவில் - கரூா் சாலை, ஒத்தக்கடை பழனிசாமி நகா் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவருக்கு முன்னால் சென்ற காரின் ஓட்டுநா் எவ்வித சிக்னலும் இன்றி திடீரென காரை நிறுத்தி காா் கதவைத் திறந்துள்ளாா். அப்போது பின்னால் வந்த சந்திரசேகரனின் இருசக்கர வாகனம், காா் கதவு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த சந்திரசேகரனை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து சந்திரசேகரனின் மனைவி, போதும் பொன்னு அளித்த புகாரின்பேரில், காரை அலட்சியமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நீலகிரி மாவட்டம், குன்னூா் மவுண்ட் சாலை அக்பா் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த பிரபு மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.