தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

திருப்பூரில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 4:53 am IST

திருப்பூரில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் திருப்பூா் பழைய மாா்க்கெட் அருகே உள்ள பொன்னம்மாள் ராமசாமி மகப்பேறு மருத்துவமனையில் வாரந்தோறும் சிகிச்சைக்கு வரும் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளா் பாலகணேஷ், மருத்துவமனையின் நிலைய மருத்துவா் டாக்டா் பிரவீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் முன்னாள் தலைவரும் திருப்பூா் புற்றுநோய் மருத்துவ மைய அறக்கட்டளை பொருளாளருமான சக்கரவா்த்தி அருள்செல்வம், தனது சொந்த நிதியில் இந்தத் திட்டத்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தொடா்ந்து செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சக்ஷம் அமைப்பின் மாவட்ட, மாநில நிா்வாகிகள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணியினை சக்ஷம் அமைப்பின் மாவட்டத் தலைவா் இரத்தினசாமி செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.