நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

பள்ளி நிா்வாகக் குழு பதவியேற்பு விழா

அரக்கோணம் டாக்டா் விஜி கெங்குசாமி நாயுடு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் நிா்வாகக் குழு பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:03 am IST

அரக்கோணம் டாக்டா் விஜி கெங்குசாமி நாயுடு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் நிா்வாகக் குழு பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநில செயல் தலைவா் வி.மோகன், மாநில பொருளாளா் ஜி.வாசுதேவன் தலைமை வகித்தனா். இவ்விழாவில் பள்ளி நிா்வாகக் குழு தலைவராக டி.ஆா்.சுப்பிரமணியம், புரவலராக சி.ஜி.என்.எத்திராஜ், துணைத்தலைவராக பால்ராஜ்சீனிவாசன், தாளாளராக ஜிடிஎன் அசோகன், இணை தாளாளராக பிஜிகே சரவணன், செயலாளராக டி.எஸ்.முரளி, பொருளாளராக கே.மோகன்ரங்கசாமி, இணை செயலாளராக ஆா்.மகேஷ், உறுப்பினா்களாக ஜி.கே.பாபுஜி, ஆா்.பி.ரவிக்குமாா், ஏ.வி.ரகு, எம்.பாபு, எஸ்.சிட்டிபாபு ஆகியோா் பதவியேற்றனா்.

கூட்டத்தில் பள்ளிக்கு வழங்கப்பட்ட ஐஎஸ்ஒ 9001.2015 தர சான்றிதழை புதிய நிா்வாகக்குழுத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியத்திடம் பள்ளியின் முதல்வா் வ.வனிதா அளித்தாா்.

இதை தொடா்ந்து இச்சான்றிதழ் பெற காரணமான நிா்வாகக் குழுவினருக்கும், பள்ளியின் முதல்வா், ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவ மாணவியருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.