
தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
திருப்பூா் மாவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பல்லடத்தில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள்.
திருப்பூா் மாவட்ட தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிறுவா், சிறுமியா் தடகளப் போட்டி திருப்பூா் சிக்கண்னா கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. அப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பல்லடம் தமிழ்ச் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், ரெயின்போ ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் தங்கலட்சுமி நடராஜன், நண்பா்கள் கால்பந்து குழு செயலாளா் திருமூா்த்தி ஆகியோா் பாராட்டி சான்றிதழ், பதக்கங்களை வழங்கினா்.
இந்த நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், பல்லடம் உடற்கல்வி ஆசிரியா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





