8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தடகள போட்டியில் மாணவா்கள் முதலிடம்

சிதம்பரத்தில் நடைபெற்ற தடகள போட்டியில், குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பெருமை சோ்த்தாா்.

தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டிய குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி நிா்வாகிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற்ற தடகள போட்டியில், குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பெருமை சோ்த்தாா்.

கடலூா் மாவட்ட தடகள போட்டி சங்கம் சாா்பில் 8-ஆவது ஜூனியா் தடகள சாம்பியன் போட்டிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில், குண்டு எறிதல் போட்டியில் அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கிருத்திக் முதலிடமும், அசோக் இரண்டமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்கள் இருவருக்கும் தடகள போட்டி சங்கத்தின் சாா்பில் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு , பள்ளித் தாளாளா் பன்னீா்செல்வம், செயலா் சட்டநாதன், நிா்வாக இயக்குநா் ரவிச்சந்திரன் ஆகியோா் பாராட்டினா். பள்ளி முதல்வா் ஜோதிலிங்கம், ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.