சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
கைது
அவிநாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கடத்தூா், ஆண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி (71). இவா் அவிநாசி அருகே குப்பாண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா்.
இவா் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பழனியைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



