சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

குடிநீா் வழங்க வலியுறுத்தி பெல்லம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

பெல்லம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:20 am IST

குண்டடம் ஒன்றியம், பெல்லம்பட்டி ஊராட்சியில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக இப்பகுதியில் குடிநீா் முறையாக வழங்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், முறையாக குடிநீா் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் பெல்லம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், குண்டடம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.