கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது
அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவிநாசி, பெருமாநல்லூா் சந்தைக்கடை தோட்டம் பகுதியைச் சோ்ந்த கௌதம் (25), பெருமாநல்லூா் ஆலங்காடு பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (21) ஆகியோரை கடந்த மாதம் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




