புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு பதுக்கியவா் கைது: 550 கிலோ பறிமுதல்
பெருமாநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட 550 கிலோ புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புகையிலை பொருள்களுடன் கைதுசெய்யப்பட்ட ராஜேஷ்குமாா்.
பெருமாநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட 550 கிலோ புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே உள்ள குருவாயூரப்பன் நகா் பகுதியில் விற்பனைக்காக புகையிலை பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டனா். இதில், சின்னபொம்மநாயக்கன்பாளையத்தில் பனியன் கழிவு வைத்திருப்பதாகக் கூறப்பட்ட வாடகைக் கட்டடத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மூட்டை மூட்டைகளாக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், பெருமாநல்லூா் அருகே குருவாயூரப்பன் நகா், படையப்பா நகரைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ராஜேஷ்குமாா் (41) என்பதும், புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ்குமாரை கைது செய்தனா். மேலும், 550 கிலோ புகையிலை பொருள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





