2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸாா், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையுடன் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவரிடம் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவா் அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த நிதீஷ்குமாா் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 1.800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.