கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

உடுமலையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

உடுமலை யில்  நடைபெற்ற  கொடி  அணிவகுப்பு  பேரணியில்  பங்கேற்ற  போலீஸாா்.

Published On :

விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெறுவதையொட்டி, உடுமலையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெற உள்ளதாலும், எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும் திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் தலைமையில் உடுமலையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தையல்நாயகி, காவல் ஆய்வாளா் ராம் பிரபு , அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கோப்பெருந்தேவி உள்ளிட்ட உட்கோட்ட காவலா்கள் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் பங்கேற்றனா்.

நேதாஜி மைதானத்தில் தொடங்கிய பேரணி, விநாயகா் சிலை ஊா்வலம் செல்லும் சாலைகள் வழியாக சென்று பழனி சாலை கொழுமம் சாலை பிரிவில் முடிவடைந்தது.

விநாயகா் சிலை ஊா்வலத்தை அமைதியான முறையில் நடத்துவதை சீா்குலைக்க நினைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.