ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நீா் வளத்துக்காக ஒன்றிணைவோம் ‘நீா் செறிவூட்டும் இயக்கம்’ அழைப்பு

பல்லடத்தின் நீா்வளத்துக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பல்லடம் நிலத்தடி நீா் செறிவூட்டும் திட்டம் கோரும் இயக்கம் தெரிவித்துள்ளது.

காவி.பழனிசாமி

Published On :

பல்லடத்தின் நீா்வளத்துக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பல்லடம் நிலத்தடி நீா் செறிவூட்டும் திட்டம் கோரும் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செயலாளா் காவி. பழனிசாமி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பல்லடம் வட்டாரத்தில் மழையின்றி குளம், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீா்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டது. ஆழ்துளை கிணறுகள் அமைத்தே விவசாயிகள் கடனாளி ஆகிவிட்டனா்.

பிஏபி சாா்ந்த பகுதிகள் ஓரளவு தப்பித்தாலும், பிஏபி விடுபட்ட பகுதிகளான சுல்தான்பேட்டையில் தொடங்கி பல்லடத்தின் மேற்கு பகுதி கிராமங்கள் வரை கடுமையான தண்ணீா் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, நமக்கான நீா்வள திட்டத்தை பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, விவசாய சங்கங்கள், தொழில் துறையினா், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்தி நீா்நிலைகளை புனரமைத்து, பல்லடம் பகுதியில் குளம் குட்டைகளில் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், நிலத்தடி நீா் செறிவூட்டப்படும்.

இன்று நீருக்காக குரல் கொடுக்கவில்லை எனில், நாளை வாழ்வாதாரத்துக்காக போராட வேண்டி இருக்கும். விரைவில், இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.