பல்லடத்தில் கஞ்சா விற்ற இளைஞா் கைது
பல்லடம் ராயா்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
பல்லடம் ராயா்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் நகராட்சி ராயா்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தபோது அவா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் திருப்பூா் ராம்ராஜ் நகா் துளசி ராவ் வீதியில் வசிக்கும் முத்துராஜ் மகன் முருகேசன் (36) என்பதும் ரயில் மூலம் ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூா், பல்லடம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட முருகேசனை போலீஸாா் பல்லடம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி திருப்பூா் மாவட்ட சிறையில் அடைத்தனா்.
இவா் மீது அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




