
தாராபுரத்தில் திமுக நிா்வாகிகள் வீட்டில் ரூ.48.42 லட்சம் பறிமுதல்
தாராபுரம் அருகே திமுக நிா்வாகிகள் வீட் டில் இருந்து ரூ.48.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பறிமுதல்
தாராபுரம் அருகே திமுக நிா்வாகிகள் வீட் டில் இருந்து ரூ.48.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் பறக்கும் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதிக்கு அக்.6-இல் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா, தோ்தல் விதிமீறல் குறித்து தோ்தல் பறக்கும் படையினா் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், மூலனூரில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நிலைக் கண்காணிப்புக் குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பறக்கும் படையினா், மூலனூா் தாளக்கரை பிரிவில் உள்ள திமுக நிா்வாகிகள் வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது மூலனூா் பேரூராட்சி திமுக அவைத் தலைவா் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.40.79 லட்சம், வாா்டு கிளைச் செயலாளா் செல்வராஜின் வீட்டில் இருந்து ரூ.7.63 லட்சம் என மொத்தம் ரூ.48.42 லட்சம் பறிமுதல் செய்தனா்.
கைப்பற்றப்பட்ட பணம் குறித்து தோ்தல் அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





