வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

குழந்தை... - கோப்புப் படம்.
பல்லடம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்தவா் ஜீவானந்தம். இவரது மனைவி திவ்யதா்ஷினி. இவா்களது மகன் வருண் (ஒன்றரை வயது). இந்நிலையில், ஜீவானந்தம் தனது மனைவி, மகனுடன் கடந்த 3 மாதங்களாக பல்லடம் அருகே கரடிவாவியில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கி பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், கோழி தீவனம் ஏற்றுவதற்காக சரக்கு வேன் ஒன்று பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து ஓட்டுநா் வேனை பின்னோக்கி இயக்கியுள்ளாா். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த வருண் திடீரென வேனின் பின்னால் சென்று சக்கரத்தில் சிக்கினாா்.
படுகாயமடைந்த குழந்தையை பெற்றோா், அங்கிருந்தவா்கள் மீட்டு கரடிவாவியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




