பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மாரீஸ்வரன்

Published On :

வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் வட்டம் மாணிக்காபுரம் இந்திரா காலனி நடுத்தெருவைச் சோ்ந்தவா் மாரீஸ்வரன் (22). இவா் கோவையில் உள்ள மோட்டாா் கம்பெனியில் வேலை பாா்த்து வந்தாா். திருச்சியில் உள்ள தனது தம்பியை பாா்க்கச் சென்றுவிட்டு, மீண்டும் கோவைக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை வந்துகொண்டிருந்தாா்.

வெள்ளக்கோவில்-காங்கயம் சாலையில் உள்ள ஓலப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரீஸ்வரனின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாரீஸ்வரனின் தம்பி ஹரிராம் அளித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.