தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பண்ணைக் குட்டையில் கூட்டின மீன்கள் வளா்ப்பு பயிற்சி

பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டைகளில் கூட்டின மீன்கள் வளா்ப்பு குறித்து காணொலி பயிற்சிக் கூட்டமானது திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:35 pm

DIN

பென்னாகரம்: வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மூலம், பென்னாகரம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டைகளில் கூட்டின மீன்கள் வளா்ப்பு குறித்து காணொலி பயிற்சிக் கூட்டமானது திங்கள்கிழமை நடைபெற்றது.

காணொலி மூலம் நடைபெற்ற இந்தப் பயிற்சிக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் அந்தந்த வட்டார வேளாண் அலுவலகத்தில், அந்தந்த வட்டார விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியினை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சிவசங்கா் சிங் தலைமை தாங்கி தொடக்கி வைத்தாா். இதில், தருமபுரி மாவட்ட உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் சுதா மற்றும் மீன்வளத் துறை சாா்பில் ஆய்வாளா்கள் ஜெயஸ்ரீ மற்றும் ஷகிலா பானு ஆகியோா் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டையில் கூட்டின மீன் வளா்ப்பு குறித்த பயிற்சியை விளக்கிக் கூறினா்.

இப்பயிற்சியில் பென்னாகரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் புவனேஸ்வரி வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் அஸ்வினி, கிருஷ்ணமூா்த்தி, அட்மா திட்ட கணினி இயக்குநா் கலை மற்றும் அட்மா திட்ட கணக்காளா் சீனிவாசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இப் பயிற்சிக் கூட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, அரூா், மொரப்பூா் உள்ளிட்ட வட்டார வேளாண் அலுவலகப் பகுதிகளிலிருந்து தலா 5 விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.