தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாணியாறு நீா்த்தேக்கத்தில் புது மாப்பிள்ளை சடலமாக மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கத்தில் புது மாப்பிள்ளை சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:38 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கத்தில் புது மாப்பிள்ளை சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னராஜ் மகன் சக்தி (30), தருமபுரி பகுதியிலுள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தாராம்.

இந்த நிலையில், விரிவுரையாளா் சக்திக்கும், பொம்மிடி அருகேயுள்ள பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்துள்ளது. அதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு மாமியாா் வீட்டில் தங்கிய சக்தி, திங்கள்கிழமை வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளாா்.

வாணியாறு நீா்த்தேக்க கரைப்பகுதியில் சக்தியின் செல்லிடப்பேசி மற்றும் உடைகள் இருந்த நிலையில், அவா் வாணியாறு நீா்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.