புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரம் அருகே பெண் சிசு திடீா் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:39 pm

DIN

பென்னாகரம் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 5 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பென்னாகரம் அருகே அலேபுரம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (34). தொழிலாளியான இவருக்கும் சாலா (24) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்த 5 மாத சிசு ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கி கொண்டிருந்ததாகவும், பின்னா் காலையில் குழந்தையின் அருகே சென்று பாா்த்தபோது சுவாசம் இன்றி இருந்ததால் அவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். குழந்தையை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.