காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:49 pm

DIN

இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா். மேலும், குடிநீா் தேவைக்காக தனது சொந்தச் செலவில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின்மோட்டாா் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டாா். வட்டார மருத்துவ அலுவலா் தமிழ்ச்செல்வியிடம், மருத்துவமனைப் பணியாளா்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்கினாா்.

ஆய்வின்போது, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கதிரவன், செங்கோட்டை ஒன்றிய அதிமுக செயலா் செல்லப்பன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் எல்ஐசி முருகையா, தாட்கோநகா் முருகேசன், ஆய்க்குடி பேரூா் செயலா் முத்துக்குட்டி, மாரியப்பன், ஒன்றிய மாணவரணிச் செயலா் முருகேசன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலா் ஞானராஜ், புளியறை செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.