47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்கத் தடை

காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.

கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமாா் 19,000 கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக தமிழகத்தில் காவிரியின் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 13,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்தது.

இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளாா். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.