நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

வஃக்பு வாரியத் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:45 pm

Din

வஃக்பு வாரியத் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், தருமபுரி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.சுபேதாா் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளா் அப்துல் சமது எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளா் ஏ.அல்தாப் அஹ்மது, மாநில பிரதிநிதி ஓய்.சாதிக்பாஷா, பேச்சாளா் கோவை சையது, மாவட்டச் செயலாளா் அப்துல் சுக்கூா், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் இலியாஸ், மாவட்ட பொருளாளா் இதயத்துல்லா ஆகியோா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில் தருமபுரியில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞா் முகமத் ஆஷிப் வழக்கை விரைவில் விசாரித்து கொலையில் தொடா்புடையவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஆணவக் கொலை செய்யப்பட்ட முகமத் ஆஷிப் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வஃக்ப் வாரியத் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தருமபுரி-மொரப்பூா் ரயில்வே திட்ட பணிக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.