நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்ட முடியாது: ஜிகே மணி

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்ட முடியாது: ஜிகே மணி

Updated On :18 பிப்ரவரி 2024, 12:03 am IST

பென்னாகரம், பிப்.17: தமிழகம்- கா்நாடகம் இடையே காவிரி நதிநீா்ப் பங்கீடு தொடா்பான வழக்கு இருப்பதால் மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணைக் கட்ட முடியாது என பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி தெரிவித்தாா். ஒகேனக்கல் அருகே ஊட்டமலை ஏரிக்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலைக் கடையினை பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஜி.கே.மணி திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: கா்நாடகம்- தமிழகம் இடையே காவிரி நதிநீா்ப் பங்கீடு தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பு, உச்சநீதிமன்ற இறுதித் தீா்ப்பின் அடிப்படையில் மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட முடியாது. இது தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் மேக்கேதாட்டு அணையைக் கட்டக் கூடாது என நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து மிகவும் குறைந்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நிகழாண்டில் மழையளவு குறைந்துள்ளது. இதனால் கடுமையான வறட்சி நிலவி குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க போா்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் கிராமப் பகுதிக்குள் நுழைந்து பயிா், உயிா் சேதங்களை ஏற்படுத்துவதை தவிா்ப்பதற்கு ஒரேவழி சோலாா் மின் வேலி அமைப்பது என்பதால் வனத் துறை அமைச்சரிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகள் ஏற்படும் வறட்சியினால் வன விலங்குகள் தண்ணீா் தேடி சுற்றித் திரியும் நிலையைத் தவிா்க்கும் வகையில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து பாமக தலைமை விரைவில் அறிவிப்பு வெளியிடும். அனைத்துத் தரப்பு மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது என்றாா்.